Saturday, 9 February 2019

எம்பெருமானை   நேரில்   கண்குளிர   தரிசித்து   பெருமகிழ்ச்சி   அடைந்த   இரு   திருவருட்ச்செல்வர்களும்   திருவாய்மூர்   ஈசனை   பதிகம்   பாடி   மனம்   குளிர   சேவித்து   விட்டு   திருமறைக்காடு   சென்று   சில   நாட்கள்   தங்கி   எம்பெருமானை    சேவித்தனர் .    அப்போது    பாண்டிய   நாட்டிலிருந்து   தூதர்கள்   சம்பந்தரை   காண   வந்தனர் .   சம்பந்தர்   அவர்களை   வரவேற்று   விசாரித்தார் .  அவர்கள் பாண்டிய   நாட்டு   பட்டத்தரசி   மங்கையற்கரசியாரும்    மந்திரி   குலச்சிறையாரும்   தங்களை   அனுப்பியதாக   கூறினர் .  அப்போது   பாண்டிய   நாட்டில்   நிலைமை   சரியில்லை   என்றும்   அங்கு   சமணர்களின்    ஆதிக்கம்  அதிகம்   ஆகிவிட்டதாகவும்   மன்னரும்   அவர்கள்   கைப்பாவையாகி   சைவம்   மறந்து   போனதாகவும்   சிறந்த   சிவ   பக்தர்களான   அம்மையாரும்   குலச்சிறையாரும்   மிக்க   வேதனை   அடைந்திருப்பதாகவும்   ஞானபாலுண்ட   சம்பந்த   பெருமான்   பெருமை   அறிந்தவர்கள்   ஆதலால்   ஆவர்   வந்தால்தான்   பாண்டிய   நாடு   விடுதலை   பெரும் .  ஆதலால்   அவரை   அழைத்து   செல்ல   வந்ததாக   கூறினர் .

No comments:

Post a Comment