ஆலயம் தொழுது வெளியே வந்த சம்பந்தரை குலச்சிறையார் பல்லக்கை வலம் வந்து அவர் கால்களில் விழுந்து வணங்கினார் . பிறகு அரசி வந்திருப்பதையும் கூறினார் . மங்கையர்க்கரசியார் ஞானப்பிள்ளை பாதங்களில் விழுந்து வணங்கினார் . அம்மையை தூக்கி விட்டு ஆலவாய் ஈசன் அருளால் நல்லதே நடைக்கும் என்று வாழ்த்தினார் . பாண்டிய நாடு துயர் நீங்கி வாழ தாங்கள்தான் உதவ வேண்டும் . மன்னன் சமணர்கள் கைப்பாவையாகி சைவம் துறந்தான் . தாங்கள்தான் பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் செழித்து அரசனும் சைவத்தை தழுவி நாடு செழிக்க செய்ய வேண்டும் என்று வேண்டி கொண்டாள் .. சம்பந்தரும் ஆலவாயான் பேரருளால் எல்லாம் இனி தே நடைபெறும் என்று வாழ்த்து கூறினார் . அரசியார் பெரும் நிம்மதி அடைந்தார் .
No comments:
Post a Comment