மன்னன் அச்சமணர்களின் வருகைக்கு காரணம் வினவினார் . அதற்கு அவர்கள் தோணிபுரத்திலிருந்து ஒரு அந்தண சிறுவன் வந்திருக்கிறானாம் . நிரம்ப கற்றவனாம். அவனுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டதாம் . மன்னன் அதிக சுவாரஸ்யம் காட்டாமல் அதற்கு என்ன செய்ய வேண்டும் ? என்று கோபமாக வினவினார் . அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் மந்திர சக்தியால் அவர் தங்கியுள்ள மடத்தை தீப்பற்றி எரிய செய்கிறோம் . அவன் பயந்து ஓடி விடுவான் . என்றனர் . அரசனும் அதற்கு சம்மதம் அளித்தான் . உடனே காரியத்தில் இறங்கினர் சமணர்கள் . மடத்திற்கு எதிரில் மறைவான இடத்தில் அமர்ந்து கொண்டு சமணர்கள் மந்திரம் ஜபிக்கலானார்கள் . மடத்தில் ஓதப்படும் பஞ்சாக்ஷரத்தின் முன் அவர்கள் மந்திரம் எடுபடவில்லை . அவர்கள் முயற்சி வீணாயிற்று . நடுங்கி ஓடிவந்தனர் . அரசன் காதில் இந்த விஷயம் எட்டினால் ஆபத்து என்று பயந்து சில ஆட்களை நிறைய பொன் கொடுத்து மடத்தை எரிக்க ஏற்பாடு செய்தனர் .
No comments:
Post a Comment