அரசியாரும் மந்திரியாரும் ஞானப்பிள்ளையை அழைத்து வர முடிவு செய்ததும் அரசியார் மெதுவாக கணவரை அணுகி நேற்று யாரோ சமணர்களால் ஈசனிடம் ஞானபாலுண்ட ஐயன் தங்கி இருக்கும் மடத்திற்கு தீ வைத்து அவரையும் கொல்ல முயற்சி நடந்ததாக தெரிகிறது . அதன் காரணமாகவே இந்நோய் வந்திருப்பதாக தோன்றுகிறது . ஆகையால் அத்தெய்வ திருமகனை அழைத்து திருநீறு பூச செய்யலாம் என்று நினைக்கிறேன் என்று கூறினார் . அரசனுக்கும் அப்பெயரை கேட்டதுமே புல்லரித்து . அரசன் உடனே ஒப்பு கொண்டான் . சமணர்கள் எதிர்த்தனர் . அரசன் வெகுண்டெழுந்தான் . பயந்த சமணர்கள் வாயடைத்து போனார்கள் .
No comments:
Post a Comment