சமணர்கள் இரவு துர்சொப்பனங்களை கண்டனர் . துர்சொப்பனங்களும் துர்சகுனங்களும் அவர்களை ஆட்டிப்படைத்தன . காரணம் புரியாமல் தடுமாறினார் . அதே சமயம் பாண்டிய அரசிக்கும் மந்திரியாருக்கும் பல நற்சகுனங்கள் தோன்றி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டின . காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தனர் . அப்போது அவர்களுக்கு காழிப்பிள்ளை மதுரை நெருங்கும் செய்தி கிட்டியது . அவர்கள் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது . ஞானபாலுண்ட பிள்ளை மதுரை நெருங்கி விட்ட செய்தி கேட்டதும் மகயற்கரசியார் மந்திரியாரை அழைத்து சம்பந்த பெருமானை தக்க மரியாதையுடன் அழைத்துவர ஆணையிட்டார் . குலச்சிறையாரும் அவ்வாறே குறையின்றி வரவேற்பதாக கூறி புறப்பட்டார் . அடியார்கள் கூட்டம் திரண்டிருந்தது . அவர்கள் அவரை வாழ்த்தி எழுப்பிய கோஷம் வானை முட்டியது . சம்பந்தரும் ஆலயம் சென்று ஆலவாய் அண்ணலை மனதார தொழுது வெளியே வந்தார் .
No comments:
Post a Comment