சம்பந்தப்பெருமான் தம் அடியார்களுடன் அரசியார் தங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மடத்திற்கு எழுந்தருளினார் . அரசியாரும் மந்திரியாரும் மனம் நிம்மதி அடைந்தவர்களா க அரண்மனை சென்றனர் . அவர் வருகை சமணர்கள் இடையே பெரும் கலக்கத்தை உண்டாக்கியது . அவர்கள் சம்பந்தர் பெருமையை கேள்விப்பட்டிருக்கிறார்கள் . அது அவர்களுக்கு பயத்தை உண்டாக்கியது . அவர்கள் தங்கி இருந்த மடத்திலிருந்து எழும் வேத ஒலியும் வேள்வி புகையும் அவர்கள் கலக்கத்தை மேலும் அதிகமாக்கியது . அவர்கள் அனைவரும் கூடி ஆலோசனை செய்து தங்கள் மந்திர சக்தியால் மடத்தை எரித்துவிட முடிவு செய்தனர் . அதற்கு மன்னருடைய அனுமதி பெற எண்ணினர் . எல்லோரும் கூடி மன்னரிடம் சென்றனர் . மன்னர் அவர்களின் வாடிய முகத்தை கண்டு அவர்கள் வருகையின் காரணம் வினவினார் .
No comments:
Post a Comment