சம்பந்தர் அமைச்சரை சமாதானம் செய்து ஆலவாயான் அருளால் அரசரையும் குணமாக்கி சமணர்களையும் வாதிட்டு வெல்வேன். என்று சொல்லி ஆலயம் சென்று எம்பெருமானின் ஆசி பெற்று கிளம்பினார் . அரண்மனையை அடைந்ததும் அரசியார் அவரை மிக்க அன்புடன் வரவேற்று அரசனிடம் அழைத்து சென்றார் . அரசரிடம் ஸ்வாமி அவர் வந்திருக்கிறார் என்றதும் அரசன் தலையை தூக்கி அவரை வணங்கி வரவேண்டும் என்று வரவேற்று பக்கத்திலிருந்த பொற்பீடத்தை காட்டி அமரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . சமணர்களுக்கு அதை கண்டதும் பெரும் பீதி உண்டாயிற்று . அரசன் அவரை தங்கள் ஊர் எது என்று வினவ பிரமனுர் வேணுபுரம் என்று பதிகம் பாடி விளக்கினார் .
No comments:
Post a Comment