Wednesday, 6 February 2019

சம்பந்தர்   ஒரே   செய்யுள்   பாடியதும்   ஆலய   கதவு   முடிக்கொண்டது .  மக்களுக்கு   சங்கடம் நீங்கி    ஆலயம்   செல்ல   மிக   வசதியானது   கண்டு   அப்பரடிகளுக்கு   மிக்க   மகிழ்ச்சி.  ஆனாலும்  அவர்   மனம்   நிலையில்லாமல்   தவித்தது .  தான்   அத்தனை   செய்யுள்கள்   பாடும்   வரை   திறக்காத   கதவு   பிள்ளை   ஒரு   பாட்டு   பாடியதும்    மூடிக்கொண்டது   அவரை   மிக்க   வேதனைக்கு   உள்ளாக்கியது .  தன்   பக்தியில்   குறை   உள்ளதோ   என்ற   சஞ்சலம்   அவரை   வாட்டியது .  இருந்தாலும்   காழிப்பிள்ளை   சின்னஞ்சிறு   வயதில்   வேதங்களை   கற்று   அதில்   புலமை   கண்டது   அவருக்கு   பிள்ளையின்   மேன்மை   புரிந்தது .  இவ்வாறு   அலைபாயும்   மனதுடன்   படுத்திருந்த   அவரை   ஈசன்   தனக்கு   இருவரில்   பேதம்   இல்லை   என்பதை   உணர்த்த   இச்சை   கொண்டார் .  அவருடைய   கனவில்   தோன்றி   யாம்   திருவாய்முரில்   இருப்போம்   எம்மை   தொடர்ந்து   வரும்படி   பணித்தார் .  அப்பரும்   எழுந்து   வந்து   வாயிலில்   அவரை   கண்டு   அவரை   பின்   தொடர்ந்தார் .

No comments:

Post a Comment