ஆனால் சிவன டியார்கள் பாண்டியநாட்டின் நிலைமை அறிந்திருந்ததால் இவ்வாறு அசம்பாவிதங்கள் நடக்கக்கூடும் . சம்பந்தர் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் முயற்சி கூட நடக்கக்கூடும் என்று எதிர்பார்த்து இருந்ததால் இரவு புரா விழிப்புடன் இருந்தனர் . அதனால் நெருப்பை பரவாமல் உடனே அணைத்து விட்டனர் . சம்பந்தர் என்ன நடந்தது என்று வினவ அவர்கள் மடத்திற்கு தீ வைக்க முயற்சி நடந்ததையும் தாங்கள் விழித்திருந்து அத் தீயை அணைத்ததையும விவரித்தனர் . உடனே சம்பந்தர் தங்களை காத்த ஐயனை பதிகம் பாடி துதித்து பிறகு அவர் அரசனின் சம்மதம் இல்லாமல் இவ்வாறு துணிந்திருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்து தன்னை கொல்ல முயற்சி என்றாலும் சிவனை ஆராதிக்கும் பக்தர்களுக்கு கேடு விழைவிக்கும் முயற்சி என்பதால் அவர் மன்னிப்பிற்கு உகந்தவர் அல்ல என்று முடிவு செய்து 'சமணர்கள் இட்ட தீ மெல்ல சென்று அரசனையே பீடிக்கட்டும் ' என்றார் . வெப்பம் அரசனை பற்றிக்கொண்டது .
No comments:
Post a Comment