அரசன் தாம் இத்தனை நாட்கள் அறியாமையால் ஈசனை மறந்து பிற சமயத்தை நாடியதை நினைத்து வெட்கம் அடைந்தார் . சம்பந்தர் கால்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னித்து திருநீறு அளிக்குமாறு வேண்டினார் . அரசியாரும் குலச்சிறையாரும் அடைந்த மகிழ்ச்சி சொல்ல வார்த்தை இல்லை . இப்போது சம்பந்தர் சமண தலைவர்களை நோக்கி அவர்கள் கொள்கைகளை விளக்குமாறு கேட்டார் . அரசன் தன் உடல் உபாதையை தீர்க்க முடியாத அவர்களிடம் என்ன விளக்கம் தேவை ? என்று கூறினார் . ஆனால் சமணர்கள் விடுவதாக இல்லை . அனல் வாதம் செய்ய முற்பட்டனர் . அவர்கள் தாம் செய்யுள் எழுதி அனலில் விடுவதாகவும் சம்பந்தரும் அவ்வாறு செய்ய வேண்டுமென்று கூறினர் .
No comments:
Post a Comment