Monday, 4 February 2019

வாகீசப்பெருமானும்   ஞானப்பிள்ளையும்   இவ்வாறு   ஈசனின்   கொடையால்   பொன்   பெற்று   மக்களின்   பசியாற்றி   பேரானந்தம்   அடைந்தனர் . மக்களும்   அவர்கள்   சேவையால்   மிக்க   மகிழ்ந்து   போற்றினர் .  விரைவிலேயே   மழை   பொழிந்து   நீர்நிலைகளில்   தண்ணீர்   நிரம்பி   நிலைமை   சீர்   அடைந்தது .   மக்கள்   சகஜ   நிலைக்கு   வந்தவுடன்   இருவரும்   தங்கள்  பக்தி   பயணத்தை   தொடங்கினர் .  பல   சிவாலயங்களை   சேவித்து   கொண்டு   ஆரூரில்    சில   தினங்கள்   தங்கி   விட்டு   திருமறைக்காட்டை   அடைந்தனர் .   அக்கோவிலில்   வேதங்கள்   பூசித்து   மூடிய   கதவுகள்   திறக்க   முடியாத   காரணத்தால்   மக்கள்   பக்கத்து   சிறிய   வாயில்   வழியாக   எம்பெருமானை   சேவிக்க   வரவேண்டி  இருந்தது .  இக்கொடுமையை   சகித்து   கொள்ள   முடியாத   காழ்ப்பிள்ளை   அப்பர டிகளை   சேவித்து  ''இது   என்ன   கொடுமை ?  மக்கள்  தடையின்றி  செல்ல    ஆலய   கதவுகளை   திறக்க   செய்ய   தாங்கள்   வழி   செய்ய   வேண்டுமென்று   கேட்டுக்கொண்டார் .   

No comments:

Post a Comment