சம்பந்தர் பாண்டிய நாட்டு தூதர்களிடம் அரசியாரிடம் தாம் உடனே வருவதாக தெரிவிக்குமாறு சொல்லி அனுப்பினார் . தூதர்களும் மிக்க மகிழ்ச்சியோடு புறப்பட்டனர் . பிள்ளையார் வாகீசரிடம் தாம் சமண ஆதிக்கத்திலிருந்து பாண்டியநாட்டை மீட்கும் பொருட்டு மதுரை செல்ல போவதை வாகீசரிடம் தெரிவித்தார் . பெரியவர் சமணர்களிடம் தாம் அனுபவித்த கொடுமைகள நினைவிற்கு வர திடுக்கிட்ட தானும் உடன் வருவதாகவும் கிரக நிலை சரியில்லாததால் தனியே செல்ல வேண்டாம் என்று தடுத்தார். 'வேயுறு தோளிபங்கன் ' என்று தொடங்கும் பதிகத்தை பாடி காழிப்பிள்ளை விடமுண்ட கண்டன் துணை இருக்க பயம் எதற்கு ? என்று அவரை சமாதானம் செய்து பல்லக்கில் ஏறி கிளம்பினார் . வழி நெடுக உள்ள சிவாலயங்களில் ஈசனை துதித்தபடி மதுரையை நெருங்கினார் . அப்போது சமணர்கள் பள்ளிகளில் துர்சகுனங்கள் பல தோன்றின .
No comments:
Post a Comment