அப்பர் அளவிலா மகிழ்ச்சியுடன் ஈசனை பின்தொடர்ந்தார் . ஐயன் சிறிது தூரம் வாகீசர் பின்தொடர நடந்து சென்று பின் ஒரு ஆலயத்தில் நுழைந்து மறைந்து போனார் . இதனிடையில் சம்பந்தர் அப்பரடிகள் திருவாய்மூர் சென்ற செய்தி கேட்டு அவரும் அங்கு வந்து சேர்ந்தார் . ஈசன் இத்தனை தூரம் அழைத்து வந்து மறைந்தது கண்டு துக்கித்து காழிப்பிள்ளை வந்திருக்கிறார் அவருக்கும் தரிசனம் கொடுக்க எம்பிரானை மனமுருக வேண்ட அவ்வாறே அவர் காட்சி கொடுத்து இருவரையும் மகிழ செய்தார் . சம்பந் தர் பெரியவருக்கு மனதார நன்றி கூறி அவர் அழைப்பிற்கு இசைந்து தான் ஐயன் தனக்கு காட்சி தந்தார் என்று மனதார நன்றி கூறினார் .
No comments:
Post a Comment