Sunday, 17 February 2019

சிவனடியார்களை   எரிக்க   அனுமதித்த   பெரும்   பாதகமான   செயலால்    அரசன்    உடல்   வெப்பமாக   தகித்தது .  நாழியாக   ஆக   சுரவேகம்   அதிகரித்தது .  அரசியாரும்   குலச்சிறையாரும்    ஞானப்பிள்ளை   தங்கிய   மடத்தை   எரிக்க   நடந்த   முயற்சியை   கேள்விப்பட்டு   அவரை  காண  கிளம்பியவர்கள்   அரசனின்   நிலைமை   கண்டு   மிக்க   கவலையுடன்   அவரை   காண   சென்றனர் .  அரண்மனை   வைத்தியர்கள்   ஏதேதோ    சிகிச்சை   செய்தும்   சிறிதும்   முன்னேற்றமில்லை.   அதற்குள்   சமணர்கள்   செய்தி   கேள்விப்பட்டு   தங்கள்   தீவினையால்   அரசன்   நோய்   கொண்டிருப்பதை   அறியாமல்   தாங்கள்   சிகிசிச்சை   செய்து   அரசனின்   நம்பிக்கையை   பெறலாம்   என்ற   பேராசையால்   மயில்இற கும்   மந்திரித்த   ஜலத்தையும்   எடுத்துக்கொண்டு   ஓடிவந்தனர் .    அவர்கள்   முயற்சி   சிறிதும்   பயனளிக்கவில்லை .   மாறாக   அரசனின்   அவஸ்த்தை    அதிகமானது .   அரசன்   வெகுண்டான் .   அதற்குள்   அரசியாரும்   மந்திரியாரும்   இந்த   நிலைக்கு   காரணமே   அநியாயமாக   மடத்திற்கு   தீ   இட்டு    காழிப்பிள்ளையை   கொல்ல   முயன்றதுதான்   என்று   முடிவு   செய்து   அவரை   அழைத்துவர   முடிவு   செய்தனர் .   

No comments:

Post a Comment