ஞானப்பிள்ளையும் தானும் அவ்வாறே செய்வதாக கூறனார் . அரசன் சம்பந்தர் ஒப்புக்கொண்டதால் அவையோர்களை கூட்டி அங்கு தீ குண்டம் கட்டி அதில் தீ மூட்டுமாறு ஆணை இட்டார் . அவ்வாறே தீ மூட்டப்பட்டது . காழிப்பிள்ளை தன் ஓலை சுவடிகளை எடுத்து அவற்றிலிருந்து ஒரு ஓலை சுவடியை எடுத்தார் . அதில் ''போகமார்ந்த பூண்முலையாள் '' என்ற திருநள்ளாற்று பதிகம் . அதை எடுத்து நள்ளாறப்பனை மனமுருக வேண்டிக்கொண்டு ஐயன் மீது பதிகம் பாடிக்கொண்டே அதை தீயில் இட்டார் . என்ன அதிசயம் ! தீ அதை தீண்டாமல் சுற்றி வந்தது.. சந்தோஷத்தில் மக்கள் ஆரவாரம் வானை எட்டியது . அரசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான் . அவன் சமணர்களை நோக்க அவர்கள் தாங்களும் ஒரு ஓலையை இட அது பஸ்மாமாகியது . சம்பந்தர் தம் ஓலையை கண்களில் ஒற்றியபடி எடுத்து கொண்டார். மக்கள் மிகுந்த சநதோஷம் அடைந்தனர் .
No comments:
Post a Comment