Thursday, 28 March 2019

மயிலையில்   சம்பந்தர்   எம்பெருமான்   மீதுள்ள  காதலால்   உடனே   ஆலயம்   சென்று    கபாலீஸ்வரரை   கண்குளிர   தரிசித்து   பதிகங்கள்   பாடி மகிழ்ந்தார் .   பிறகு   சிவநேசரை   அழைத்து   பூம்பாவை   அஸ்தி   வைத்துள்ள   குடத்தை   எடுத்துவர   பணித்தார் .    ஆனந்தம்   தாங்காமல்   சிவநேசர்   மாளிகை   சென்று   கன்னிமாடத்திலிருந்து   அக்குடத்தை   எடுத்து   வந்து   சிவிகையில்   ஏற்றி   மேளதாளத்துடன்   எடுத்து   வந்தார் .  அதற்குள்   இந்த  செய்தி     ஊரில்   பரவி   மக்கள்   கூட்டம்   கோவிலை   அடைந்தனர் .   குடத்தை   சம்பந்தப்பெருமானிடம்   கொடுத்து சிவநேசர்   வணங்கினார் .   கபாலீச்சரம்  அமர்ந்தானை    சம்பந்தர்   மனமுருக    வேண்டிக்கொண்டு   மட்டிட்ட  ' புன்னையன் '  எனும்   பதிகம்   பாடி   உத்திராபல்கணத்தார்    செய்யும்   திருக்கோலங்களை     விவரித்து    இவைகளை    காணாமல்   அவச  ரமாக        போனாயோ   பூம்பாவாய்   என்று   அவைகளை   விவரித்து   பாடினார் .       

No comments:

Post a Comment