அப்போது சம்பந்த பெருமான் தொண்டை நாட்டு தலங்களை சேவித்து கொண்டு திருவொற்றியூர் வந்திருப்பதை கேள்விப்பட்டு சிவநேசர் அவரை மயிலை அழைத்து வர பெரும் ஏற்பாடுகள் செய்து தம் தொண்டர்களுடன் தகுந்த மரியாதையுடன் அவரை அழைத்து வர கிளம்பி சென்றார் . அதற்குள் கபாலீஸ்வரர் மீதுள்ள அடங்கா காதலால் அவர் மயிலையை காண புறப்பட்டார் . சிவநேசர் அவரை வழியில் சந்தித்து அவரை வலம் வந்து வணங்கினார் . கூட வந்தவர்கள் மூலம் சிவநேசர் பெருமையையும் அவருக்கு தன்மீ து உள்ள அத்யந்த பக்தியை யும் கேள்விப்பட்ட காழிப்பிள்ளை பல்லக்கைவிட்டு இறங்கி அவரை அன்போடு அணைத்து கொண்டார் . பின்பு இருவரும் மயிலை வந்து சேர்ந்தனர் .
No comments:
Post a Comment