Tuesday, 19 March 2019

சீர்காழியிலிருந்து   கிளம்பிய   சம்பந்தர்   முதலில்   தில்லை   சென்று   நடராஜ   பெருமானை   கண்குளிர   தரிசித்து   கொண்டார் .   பிறகு   சமணர்களால்   கல்லை   கட்டி   கடலில்   வீசப்பட்ட   அப்பர்   பெருமானை   சிறிதும்   காயமின்றி   கரை   சேர்த்த   திருப்பாதிரிப்புலியூர்    ஈசனை   சேவித்துக்கொண்டு   அப்பரேடிகளை   நோய்   தீர்த்து    நாவுக்கரசர்   எனும்   பெயர்  சுட்டி    பாடவைத்த   அண்ணலை   திருவதிகை   விரட்டானேஸ்வரரை   நன்றியுடன்   வணங்கிக்கொண்டார் .   நாரணனும்   பிரமனும்   தேடி   அடி   முடி   காண   முடியாத   தீ   பிழம்பாக   காட்சி   தந்து  பிறகு   அவர்களுக்கு   அருளிய   தலமான   திருவண்ணாமலை   சென்று   ''உண்ணாமுலை    உமையாளொடும் ''   எனும்    பதிகம்   பாடி   மகிழ்ந்தார் .   பிறகு   வேதங்கள்   புசித்த   வேதநாயகர்   குடிகொண்டிருக்கும்   தி ருவோத்தூர்   சென்றார் .  அங்கு   மக்கள்    மகிழ்ச்சியுடன்    பெரும்   வரவேற்பு    அளித்தனர் . நெகிழ்ந்து     போனார்    காழிப்பெருமான் .    அங்கு   சேவிக்கும்போது    ஒரு   பக்தர்   தன்   குறையை   கூறினார் .   அவர் ''  ஐயனுக்காக    பனை   மரங்களை     வளர்த்தேன் .    ஆனால்   என்ன   காரணமோ   எல்லாம்    ஆண்   பனையாக   குலை   தள்ளவே   இல்லை .   சமணர்களின்   பெரும்   கேலிக்கு   ஆளாகி   விட்டேன் ''  என்று   கூறி   வருந்தினார் .   உடனே   சம்பந்தர்    ஐயனை   மனதார      வேண்டி   ''புத்தேர்ந்தாயின ''  எனும்   பதிகம்   பாடினார் . என்ன   அதிசயம் .  இறைவன்      அருளால்    எல்லா     மரங்களும்       குலை    தள்ளின .

No comments:

Post a Comment