சம்பந்தர் தந்தையுடன் மகிழ்ச்சியுட ன் இருந்தார் . அவருக்கு தான் வந்த நோக்கம் நிறைவேறியவுடன் பாண்டியநாட்டில் தங்குவதில் விருப்பம் இல்லை . இன்னும் தொண்டை மண்டலத்திலுள்ள சிவஸ்தலங்களை சேவிக்க மனம் விழைந்தது . அவர் பாண்டிய மன்னனிடமும் அரசியிடமும் விடை பெற்றுக்கொள்ள சென்றார் . அவர்களுக்கு சம்பந்தரை பிரிய மனமே இல்லை . ஆனாலும் அவர் ஞாயமான கோரிக்கையை நிராகரிக்க இயலவில்லை . சம்பந்தர் அவர்களை சமாதானம் செய்து பாண்டிய நாட்டில் உள்ள சிவாலயங்களை தன்னுடன் வந்து சேவித்து பிறகு தனக்கு விடை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார் . அவர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தனர் . திருப்பரங்குன்றம் திருநெல்வேலி இன்னும் பல தலங்களை சேவித்து கொண்டு சேதுக்கரை அடைந்து ராமபிரான் வணங்கிய எம்பெருமானையும் வணங்கி அங்கிருந்த படியே இலங்கையில் திரிகோணமலையையும் திருக்கேதீச்சரத்தையும் வணங்கி கொண்டார் .
No comments:
Post a Comment