Monday, 25 March 2019

சிவநேசர்   மகள்   பூம்பாவையை   தம்   மாளிகையில்   கன்னிமாடம்   கட்டி   அதில்   தோழியருடன்    தங்க   வைத்தார் .   ஒரு   அரச   குமாரிபோல்   வாழ்ந்து   வாழ்ந்தாள்   பூம்பாவை .   அச்சமயம்   காழிப்பிள்ளை   பாண்டிய   நாட்டில்    சமணர்களை   வென்று   அவர்கள்   கைப்பாவையாக   இருந்த   மன்னனின்   நோய்   நீக்கி   அவரை   சைவத்தின்மீது   பெரும்    பக்தி   கொள்ள   செய்து    அவர்   கூனையும்   நிமிர்த்தி   பெரும்   சாதனை   செய்ததை   கேள்விப்பட்ட    சிவநேசர்   பரமானந்தம்   அடைந்தார்.   தான்   தன்   செல்வம்   அனைத்தும்   தம்   மகளும்   அவருக்கே   சொந்தம்   என்று   எண்ணிக்கொண்டு   பெரும்   மனக்கோட்டை   கட்டிக்கொண்டிருந்தார் .  ஆனால்   விதி   விளையாடியது .  ஒரு   நாள்   பூம்பாவை   மலர்   கொய்து   கொண்டிருந்தபோது   அவளை   அரவம்          தீண்டியது.     அவள்   பாம்பு    கடித்து   விட்டது   என்று   அலறியபடி   விழுந்தாள் .        தோழியர்   அவளை தூக்கி    சென்று   வீட்டில்    கிடத்தினர் .  பதறி   அடித்து   கொண்டு   வந்த   தந்தையார்   பல   வைத்தியர்களை   வரவழைத்து   வைத்தியம்   பார்த்தார்   அரச   வைத்தியர்களையும்   வரவழைத்தார் .  மூன்று  நாள்     சென்றது .   ஒரு   பலனும்   இல்லை .     மனமொ டிந்த   அவர்   அவளை   எரியூட்டி   அவளுடைய  எலும்பையும்    சாம்பலையும்   ஒரு   தங்க   குடத்திலிட்டு   பட்டாடை   சுற்றி   அவள்   படுக்கை   மீது  வைத்து   தினம்   தூப   தீபம் நைவேத்தியம்   எல்லாம் செய்து   பாதுகாத்து   அதை  சம்பந்தரிடம்   ஒப்படைக்க  எண்ணினார் .

No comments:

Post a Comment