சம்பந்தருக்கு வில்லவனேஸ்வரரை காண வெள்ளம் வடியும் வரை காக்க பொறுமை இல்லை. கட்டி வைத்திருந்த ஓடம் ஒன்றை அவிழ்த்து அதில் அடியார்களை அமர செய்தார் . தானும் ஏறி அமர்ந்தார் . ஐயனை மனமார துதித்து பதிகம் பாடினார் . செல்வ மகன் கேட்டு மறுப்பாரா தந்தை ? அவன் திருவருளால் ஓடம் சலனமில்லாமல் மிதந்து அக்கரை சேர்ந்தது . எல்லோரும் ஆலயம் சென்று ஈசனை மனமார துதித்தனர் . அங்கேயே சில நாட்கள் தங்கி ஈசனை துதித்தார் . அப்போது அவருக்கு தீயிலிட்டபோது ஆலவாயில் தன் ஏட்டை கருகாமல் காப்பாற்றிய திருநள்ளாறப்பன் நினைவு வர உடனே அவரை சேவித்து தனது மனமார நன்றி தெரிவிக்க பேரவா எழுந்தது . உடனே கிளம்பி திருநள்ளாறு அடைந்து அவரை மனமுருக தொழுதார் .
No comments:
Post a Comment