அடியார்களின் ஆனந்தம் எல்லை மீறியது . சைவம் மீண்டது எனும் ஆரவாரம் வானை எட்டியது . அரசன் ''ஈசனே முழு முதற்கடவுள் என்று நிரூபணமாகி விட்டது . இது நாள் வரை நான் மதியிழந்து படுகுழியில் வீழ்ந்திருந்தேன் . ஐயனே இன்று தங்கள் கருணையால் கரையேறி விட்டேன் '' என்று தழுதழுக்க கூறி சம்பந்தர் காலடியில் வீழ்ந்தார் . அரசியும் குலச்சிறையாரும் இத்தனை காலமாக தங்களை வாட்டிய வேதனை நீங்கி சந்தோஷம் அடைந்தனர் . சம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு ஆலவாய் அண்ணலுக்கு ''விடலாலவாயிலாய் '' என்ற பதிகம் பாடி தன் நன்றியை தெரிவித்து கொண்டு தம் மடத்திற்கு திரும்பினார் . வா திலே தோற்ற சமணர்களை அவர்கள் வாயாலேயே விதித்த நிபந்தனையின்படி மந்திரியார் கழுவிலேற்றி தண்டித்தார் . பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் தழைத்தோங்க மக்கள் பக்தியுடன் எம்பெருமானை தொழலானார்கள் .
No comments:
Post a Comment