மடத்தில் வாகீசப்பெருமானும் காழிப்பிள்ளையும் பேசிக்கொண்டிருந்த போது பிள்ளை பாண்டிய நாட்டில் தம் அனுபவங்களை விளக்கி கூறினார் . அரச தம்பதிகளுடன் தான் பாண்டிய நாட்டில் சிவத்தலங்களை சேவித்ததை விளக்கினார் . அதை கேட்டு அப்பர் பெருமானுக்கு தானும் அத்தலங்களை சேவிக்க வேண்டுமென்ற பேரவா உண்டாயிற்று . அதேபோல் சம்பந்தருக்கு வாகீசர் சொல்ல கேட்டு தொண்டைநாட்டு தலங்களை காணவேண்டுமென ஆவல் பெருகிற்று . ஆளுடைப்பிள்ளை அப்பர் பெருமானிடம் விடை பெற்று கொண்டு காவிரி கரையில் திருப்பழனம் திருவையாறு மற்றும் சில தலங்களை தரிசித்துக்கொண்டு சீர்காழி வந்து சேர்ந்தார் . வெகு நாட்களுக்கு பிறகு தோணியப்பரை காணும் ஆவலுடன் ஆலயம் சென்று மனமார தரிசித்தார் . தந்தையிடம் தொண்டை நாட்டு தலங்களை சேவிக்க தனது அவாவை தெரிவித்தார் . தந்தை தானும் கூட வர ஆவல் தெரிவித்தார் . சம்பந்தர் மறுத்து யாகம் செய்ய வேண்டிய அவசியத்தை கூறி தோணிபுரத்தில் தங்கி இக்கடமைகளை முடிக்குமாறு கூறி அவர் தம் தொண்டை நாட்டு பயணம் புறப்பட்டார் .
No comments:
Post a Comment