திருநள்ளார் சென்று திரும்பிய சம்பந்தர் அடுத்து திருத்தெளிச்சேரி சென்று அங்கு ஈசனை சேவித்துக்கொண்டு வந்தார் . அடியார்கள் சிவம் தழைக்க செய்த சிலர் , சமணரை வென்ற சீர்காழி பெருமான் வருகிறார் என்று கோஷமிட்டு கொண்டே வந்தனர் . அவர்கள் பௌத்தர்கள் வசிக்கும் பள்ளியை நெருங்கினர் . பௌத்தர்கள் அவர்கள் அவ்வாறு கோஷமிடுவதை ஆக்ஷேபித்தனர் . வாய் மூடிக்கொண்டு செல்ல வேண்டும் . இல்லாவிடில் வேறு மார்க்கமாக செல்லும்படி வற்புறுத்தினர் . அவர்கள் தலைவன் புத்தநந்தி சிறுவன்தானே என்று மிக அலட்சியமாக பேசினான் . சினமடைந்த சம்பந்தர் ஐயன் மேல் பதிகம் பாடி அவன் இடிவிழ வேண்டுமென்று வேண்டினார் . உடனே பளிச்சென்று மின்னல் தோன்றி அவர் தலையை தாக்கி அங்கேயே வீழ்ந்தார் . மற்றவர்கள் பயந்து ஓடிவிட்டன ர. சம்பந்தர் பக்கத்தில் மண்டபத்தில் பல்லக்கை இறக்க சொல்லி அவர்களை வாதுக்கு அழைத்தார் . சாரிபுத்தன் என்பவன் அடியார்களுடன் வாதத்திற்கு வந்தா ன் . சம்பந்தர் அவர்களுக்கு அன்பேமயமான சிவபெருமானின் பெருமைகளை எடுத்துரைத்தார் . அவர்களால் பிள்ளையாரை எதிர்த்து வாதம் செய்ய முடியவில்லை . எல்லோரும் அவரிடமே திருநீறு வாங்கி பூசிக்கொண்டு சைவம் தழுவினர் .
No comments:
Post a Comment