பின்னர் காழிப்பிள்ளை பௌத்தர்களை சைவத்தை தழுவ செய்த மன நிறைவுடன் திரு க்கடவூர் சென்று காலாந்தக பெருமானை சேவித்து கொண்டு வந்தார் . அப்போது திருப்பூந்துருத்தியில் அப்பர் பெருமான் தங்கியிருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவரை சேவிக்க ஆவல் கொண்டார் . உடன் அவரை பார்க்க விரைந்தார் . திருப்பூந்துருத்தி அடைந்தவுடன் அப்பர்பெருமான் எங்கே,எங்கே என்று அவலுடன் வினவினார் . அப்போது நாவுக்கரசர் கீழிருந்து வெளியே வந்து ''இதோ இருக்கிறேன் இன்றுதான் தங்களை சுமக்கும் பாக்கியம் பெற் றேன் .'' என்று கூறிக்கொண்டே வந்தார் . உடனே சம்பந்தர் என்னை இப்பாவத்திற்கு ஆளாக்கி விட்டிர்களே என்று கூறி கொண்டு அவர் காலில் விழ எத்தனித்தார் . அதற்குள் அப்பர் இவர் காலில் விழுந்தார் . இருவரும் திருமடம் சென்றனர் .
No comments:
Post a Comment