நந்தனார் மிக்க ஏமாற்றமடைந்தார் . கண்ணீர் மல்க ஐயனை துதித்தார் .ஈசனே உன்னை காணும் பேராவலுடன் இங்கு வந்தேனே . இவ்வாறு நந்தி மறைத்து உன்னை காணமுடியாத பாவி ஆகிவிட்டேன' என்று வெகுவாக அழுது புலம்பினார் . பொறுப்பாரா ஈசர் . உடனே நந்திக்கு பக்தன் தன்னை கான்பதற்கு சற்று விலகி இருக்கும்படி ஆணை இடுகிறார் . என்ன அதிசயம் ! நந்தி விலகி பக்தன் ஈசனை கண் குளிர காண இடமளித்தது . நந்தனார் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை . நந்தனார் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார் . ஐயன் திருமேனியை உள்ளம் குளிர தரிசித்தார் ஆனந்த கூத்தாடினார் . பக்தியுடன் பலவாறாக துதித்தார் . தனக்கு இவ்வாறு கருணை காட்டிய ஐயனுக்கு ஏதாவது திருப்பணி செய்ய ஆவல் கொண்டார் . ஆலயத்தின் பக்கத்தில் ஒரு குழி இருப்பதை கண்டார் . அங்கு ஒரு திருக்குளம் தேவை என்று எண்ணி சில ஆட்களை வரச்செய்து உடனே வேலையை தொடங்கினார் . சில நாட்களில் வேலை முடிந்து அழகிய திருக்குளம் உருவானது .. நந்தனாருக்கு அளவிலா மகிழ்ச்சி . ஊர் திரும்பினார் .
No comments:
Post a Comment