ஈசன் நந்தனாரின் கனவில் தோன்றி 'அன்பனே நாளை நீ நம்மிடம் வருவாயாக . இப்பிறவி நீங்க வேள்வி தீயில் மூழ்கி எழுந்து எம்மிடம் வந்து சேர் ' என்று ஆணையிட்டார் . நந்தனாருக்கு ஆனந்தம் தாங்கவில்லை . பொன்னம்பலவாணனின் அன்பை நினைந்து அவரது கண்கள் நீரை ஆறாய் பொழிந்தன . பலவாறு பாடி கொண்டாடினார் . உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார் .
காலையில் தில்லைவாழ் அந்தணர்கள் ஈசனின் இப்பெரும் கருணையை எண்ணி பெரிதும் மகிழ்ந்து கொண்டாடினர் . நந்தனை காண பெரும் ஆவல் கொண்டனர் . ஈசனின் கட்டளைப்படி பெரிய பள்ளம் தோண்டி அதில் யாக தீ மூட்டி சிறப்பாக யாகம் செய்ய ஏற்பாடு செய்தனர் .

No comments:
Post a Comment