ஊதியம் பெறாமல் இத்தனை பொருள்களை கோயில்களுக்கு சமர்ப்பிப்பதில் அவர் மனம் மட்டற்ற மகிழ்ச்சியை அடையும் . அவர் புலையர் குலத்தினராதலால் ஆலயத்திற்குள் நுழைய முடியாது வாயிலில் நின்றபடி நெஞ்சுருகி கண்ணீர் மல்க ஐயனை மனதார தொழுவார் . அவர் ஆலயத்திற்கு செய்யும் இத்தொண்டால் மகிழ்ந்த மக்கள் ஜீவனத்திற்கு கொஞ்சம் நிலங்களை மானியமாக கொடுத்தனர் .அதில் செலவு போக மிகுதியை ஆலய தொண்டிற்கே செலவு செய்வார் . நந்தனார் இவ்வாறு பக்கத்திலுள்ள கோயில்களுக்கும் இத்தொண்டுகளை செய்ய செல்லும் போது வைத்திஸ்வரன் கோயில் அருகே உள்ள திருப்புன்கூர் ஆலயம் சென்று ஈசனை தரிசிக்க விரும்பி அங்கு சென்றார் . அங்கு பெரிய நந்தி ஈசனை மறைத்ததால் அவரால் ஈசனை காண முடியவில்லை .
No comments:
Post a Comment