நந்தனார் இரவில் கனவில் ஈசன் கட்டளை இட்டது நினைவில் வந்து மெய்சிலிர்த்து தன்னை ஆண்டவன் அழைக்கிறான் என்கிற அவர்கள் சொன்னது அவரை ஆனந்தத்தின் எல்லைக்கே கூட்டி சென்றது . ஐயன் கருணையை நினைந்து மெய் உருக த்யானம் செய்து கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார். உணர்ச்சி மேலீட்டால் தடுமாறி விழுந்து எழுந்து ஓடினார் . தென்புறத்து திருவாயிலில் யாக தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது . அவரை புனித படுத்த செய்த யாகதீ அல்லவா ? ஈசனை வாயார துதித்த படியே நந்தனார் யாக குழியை வலம் வந்து யாகத்தீயில் இறங்கினார் . வாத்திய கோஷங்களும் மக்களின் வாழ்த்து கோஷங்களும் விண்ணை முட்டின . நந்தனார் கூப்பிய கரங்களுடன் எதிர்புறம் வெளியேறினார் . தேவதுந்துபி முழங்கியது . விண்ணவர் மலர்மாரி பொழிந்தனர் . வெளிப்பட்ட நந்தனார் புதிய மனிதராய் தலையில் ஜடாமுடியும் , கழுத்தில் ருத்திராக்ஷ மாலையும்., நெற்றியில் திருநீறு பளிச்சிட மார்பில் பூணுலும் பூண்டவராக சிவனடியாராக வெளிவந்தார் . பக்தர்களின் சந்தோஷ ஆரவாரம் வானை எட்டியது . அந்தணர்கள் அவரை சகல மரியாதையுடன் அம்பலவாணன் சன்னதிக்கு அழைத்து சென்றனர் . நந்தனார் பக்தி பரவசத்துடன் ஐயனை துதித்தபடியே அவருள் ஐக்கியமானார் .
No comments:
Post a Comment