சிவனடியார் திருக்குறிப்பு தொண்டரை பார்த்து என்ன வேண்டும் என வினவினார் . தொண்டர் சுவாமி ஒரு சிவத்தொண்டர் இவ்விதம் அழுக்கு துண்டை போர்த்தி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது . அதை சுத்தமாக துவைத்து நொடியில் தந்து விடுகிறேன் என்று பணிவோடு கேட்டான் . சிவனடியாராக வந்திருந்த ஈசன் 'அப்பனே ஒன்றும் வேண்டாம் . அழுக்கோ கந்தையோ இருப்பது இது ஒரு துண்டையும் உன்னிடம் கொடுத்து விட்டு நான் என்ன செய்வது ? மழை வரும்போலிருக்கிறது . இப்படியே இருந்து விட்டு போகட்டும் ' என்று மறுத்து விட்டார் . ஆனால் தொண்டர் மனம் கேட்கவில்லை . மன்னிக்க வேண்டும் ஸ்வாமி என்மனம் கேட்கவில்லை ஒரே நொடியில் தோய்த்து காயவைத்து கொடுக்கிறேன் ஸ்வாமி என்று கெஞ்சினான் . அவர் எத்தனை மறுத்து சொல்லியும் அவன் கேட்பதாயில்லை . சரி நான் வரும்போது துண்டு தயாராக இருக்க வேண்டும் . என்று சொல்லி அரை மனதுடன் கொடுத்தார் .
No comments:
Post a Comment