அவர் ஆறு கால பூஜை செய்வார் . ஆறு கால பூஜைக்கும் ஆறு விதமாக மாலைகள் சிவபெருமானுக்கு சாற்றி அழகு பார்த்து மகிழ்வார் . இவ்வாறு அவர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஞானசம்பந்த மூர்த்தி தன் பரிவாரங்களுடன் அவ்வூருக்கு விஜயம் செய்தார் . அப்போது முருகனார் அவர்களை தம் இல்லத்திற்கு வரவேற்று எல்லோருக்கும் அமுது படைத்து மகிழ்ந்தார் . இதனால் சம்பந்தரும் மிக மகிழ்ந்து அவருடன் நெருங்கி பழக்கலானார் . முருகனாரின் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் சம்பந்தரின் நட்பு கிடைத்தது . அப்போது சம்பந்தர் திருமணம் நடைபெற்றது . இவருக்கும் அழைப்பு வந்ததால் இவர் திருமணத்தில் கலந்து கொண்டு சம்பந்தரோடு சிவபெருமான் ஜோதியில் கலந்து கொள்ளும் பெரும் பேறு பெற்றார் .
No comments:
Post a Comment