தாயனாரின் செல்வம் குறைய தொடங்கியது .அப்போதும் அவர் தன் திருத்தொண்டை நிறுத்தவில்லை . ஆட்களை வைத்து வேலை வாங்கி வந்த அவர் செல்வம் எல்லாம் இழந்த நிலையில் ஒருவரிடம் கூலி வேலைசெய்து அந்த வருவாயிலும் தவறாமல் ஐயனுக்கு தாம் செய்து வந்த தொண்டினை தொடர்ந்து செய்து வந்தார் . தமக்கு கிடைத்த கூலியில் செந்நெல்லை இறைவனுக்கு அமுது படைக்க எடுத்துக்கொண்டு கார்நெல்லை தானும் தன்மனைவியும் உண்ண உபயோகித்து கொண்டார் . வறுமையிலும் விடாது தொண்டு செய்து வரும் அவருடைய அப்பெரும் அன்பை மேலும் சோதிக்க எண்ணி அவ்வூரில் விளையும் எல்லா நெல்லையும் செந்நெல்லாக மாறச்செய்தார் . தன் கொள்கையிலிருந்து சிறிதும் மாறாத தாயனார் கூலியாக கிடைத்த மொத்த நெல்லையும் ஈசனுக்கே படைத்தார். அவர் மனை வி தோட்டத்தில் விளையும் கீரையை சமைத்து அதில் இருவரும் பசியாறினர்
No comments:
Post a Comment