இச்செய்தியை கேட்ட கலயர் தன் பக்தைக்காக சிரம் தாழ்த்திய எம்பெருமானை காண மிக்க ஆவலுடன் உடனே திருப்பனந்தாள் புறப்பட்டார் . கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த அரசனை கண்டார் .யானைகள் சங்கிலியால் இழுத்து லிங்கதிருமேனியை நிமிர்த்த முடியாமல் தவிப்பதையும் கண்டார் . இத்திருப்பணிக்கு உதவாத தன் திருமேனி எதற்கு என்று எண்ணி லிங்கத்தில் கட்டி இருந்த கயிற்றை எடுத்து தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஈசனை தியானித்து கண்ணை மூடிக்கொண்டு இழுத்தார் . அதிகாரத்திற்க்கு கட்டுப்படாத ஐயன் அன்புக்கு உடனே கட்டுப்பட்டு நிமிர்ந்தார் . சந்தோஷத்தில் அரசனும் அங்கிருந்த எல்லோரும் ஆரவாரத்துடன் அவர் காலில் விழுந்து வணங்க விரைந்தனர் .கலயர் நெஞ்சு தழுதழுக்க ஏழையின் அன்புக்கு கட்டுப்பட்டு நிமிர்ந்த உன்னை என் சொல்லி போற்றுவேன் என்று கண்ணீர் மல்க நின்றார் . ஈசன் தன் மெய்யன்பனின் பெருமையை உலகுக்கு உணர்த்த தன் திருவிளையாடலை ஆடி முடித்தார் .
No comments:
Post a Comment