Saturday, 11 November 2017

இவ்வாறு   க லயர்   அமைதியாக   வாழ்ந்து   வந்த  வேளையில்   அவர்   ஒரு   செய்தி   கேட்டார் .  அதாவது   திருக்குடந்தை   அருகில்   திருப்பனந்தாள்   எனும்   ஊரில்   நடந்த   ஒரு   சம்பவம்   அவரை   அவ்வூருக்கு   சென்று   அந்த   ஐயனை   சேவிக்க   ஆவலை   தூண்டி  யது .  அவ்வூரில்   தாடகை   என்னும்   அம்மையார்   வாழ்ந்து   வந்தார் .  சிறந்த   சிவபக்தை .  தினமும்   காலையில்   நீராடி   குளத்திலிருந்து   நீர்   கொண்டுவந்து   அவ்வூர்   ஈசனுக்கு   அபிஷேகம்   செய்வதை   வாடிக்கையாக   கொண்டிருந்தாள் .  ஒரு   நாள்   அவள்   குடத்தை   இடுப்பிலிருந்து   எடுத்து   அபிஷேகம்   செய்ய   கை   தூக்க   எத்தனிக்கையில்   அவள்   சேலை   நழுவியது .  அதை   பிடித்துக்கொண்டு   குடத்தை   தூக்க   முடியாமல்   தவித்தார் .  தன்   பக்தை   தவிப்பதை   காண   சகியாத   ஈசன்   தானே  குனிந்து   நீரை   ஏற்றுக்கொண்டார் .  தன்   முடியை   தன்   பக்தைக்காக   சாய்த்த   அத்திரு   கோலத்தை  உலகம்   காண   அப்படியே    இருந்து   விட்டார் .   சோழ   அரசன்   ஈசனின்   அந்த   கோலத்தை   அவ்வாறே   இருப்பதை   விரும்பாமல்   தன்   ஆள்பலத்தால்  அவரை   நிமிர்த்த   யத்தனித்தான் .  இம்மிகூட    அசையவில்லை .  யானைகளை   கொண்டு   கட்டி   இழுத்து   நிமிர்த்த   யத்தனித்தான் .  ஒன்றும்   பலனில்லை .  அரசன்   நொந்து   போனான் .

No comments:

Post a Comment