ஈசன் அத்தம்பதியற்கு எல்லா வசதிகளையும் கொடுத்திருந்தார் . இன்பமான வாழ்க்கை தான். ஆனால் அவர்களுக்கு பிள்ளை பேறு அளிக்காதது பெரும் குறை . ஐயனை மனமுருக பிரார்த்தனை செய்தனர் . ஈசன் தன் அருமை பக்தர்களை கவனிக்காமல் இருப்பாரா? சிலகாலத்தில் அவர் மனைவி கருத்தரித்து ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் . அவர்கள் ஆனந்தத்திற்கு அளவேது ? அருமை பெருமையுடன் குழந்தை வளர்ந்தது . குழந்தையும் குலப்பெருமையை காக்கும் பண்பு மிக்கவளாக வளர்ந்தாள் . பெற்றோர் ஆனந்தத்திற்கு அளவேது ? அவள் மணப்பருவம் எய்தினாள் .
No comments:
Post a Comment