Friday, 24 November 2017

இப்போது   ஈசன்   தன்   அன்பனின்   பக்தியை   சோதிக்க   எண்ணம்   கொண்டார் .  தன்   பக்தனின்   பெருமை   உலகு   அறிய   வேண்டாமா ?  சைவ   சமயத்தில்  ஒரு   சாரார்   சிவபெருமானை  எலும்பு   மாலை   தரித்த   மூர்த்தியாக   த்யானிப்பர் .  அவர்கள்  நெற்றியில்   திருநீறும்   தலையில்   கேசத்தை   முடித்து   அதில்   எலும்பு   செருகிக்கொண்டும்   மார்பில்   மயிரினால்   ஆன   பூணுலும்   அணிந்திருப்பர் .  சிவபெருமான்   அக்கோலத்தில்     திருமண   மண்டபத்தை   அடைந்தார் .  சிவனடியார்   வந்திருப்பது   கண்டு   மானக்கஞ்சாறர்   ஓடோடி   வந்து   பக்தியோடு   அவரை   வணங்கி   வரவேற்றார் .  ஈசன்   ஒன்றும்   அறியாதவர்போல்   இங்கு   என்ன   விசேஷம் ?  என   வினவினார் .  மானக்கஞ்சாறர்   தன்   மகள்   விவாகம்   நடக்கப்போவதாக   சொல்லி   அவளுக்கு   ஆசி   வழங்குமாறு   கூறி   அவளை   அழைத்து   அடியாரை   வணங்க   கூறினார் .  அவளும்   அவர்   காலில்   வீழ்ந்து   வணங்கினாள் .   நீண்ட   அவள்   கூந்தலை   கண்டு   ஈசன்   ஆஹா   இந்த   கூந்தல்   பூணுலுக்கு   ஏற்றதாக  இ ருக்கும்   என்று   அவர்   சொல்லி   முடிப்பதற்குள்   மானக்கஞ்சாறர்   தன்   வாளை   உருவி   பெண்ணின்   கேசத்தை   வெட்டி   எடுத்து   அடியார்   கையில்   கொடுத்தார் .  அவர்   பெண்ணும்   முகத்தில்   புன்னகை   மாறாமல்   தன்   தந்தை   செயலுக்கு   எந்த   மறுப்பும்   சொல்லாமல்   முகமலர்ச்சியுடன்   அவர்   செயலை   ஏற்றுக்கொண்டாள் .   

No comments:

Post a Comment