தன் கண் பொருத்தி ஐயன் கண் சரி ஆனது அவனுக்கு அளவிலா ஆனந்தத்தை அளித்தது . தன் கண்ணை கொடுத்ததால் அவனுக்கு சிறிதும் மன வருத்தம் இல்லை . மனம் எல்லை இல்லா மகிழ்ச்சியை அடைந்தது . ஆனால் அந்தோ ! அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை . அவரது இடது கண்ணிலிருந்து ரத்தம் பெருக ஆரம்பித்தது . திண்ணன் சிறிதும் தயங்காமல் தனது இடது கண்ணை எடுக்க அம்பை எடுத்தான் . திடீரென்று அவனுக்கு நினைவு வந்தது . அந்த கண்ணையும் எடுத்து விட்டால் தன்னால் ஐயன் கண் இருக்குமிடத்தை அறிய முடியாதே என்பது மனதில் உதித்தது . உடனே தன் காலை இடது கண் இருக்குமிடத்தில் அடையாளமாக வைத்துக்கொண்டு அம்பினால் தன் இடது கண்ணை தோண்டி எடுக்க யத்தனித்தான் . அந்தக்கணமே ஈசன் தோன்றி 'நில் கண்ணப்ப ' என்று அவன் கையை பிடித்தார் தனது வலது பக்கத்தில் அவனை இருத்திக்கொண்டார் . .'திண்ணா உன் கண்ணை எனக்கு ஈந்து நீ கண்ணப்பன் ஆகிவிட்டாய் . நீ என்றும் எனது வலது பக்கத்தில் இருப்பாய் உன்னுடைய அளவிலா பக்தியை உலகம் உணர செய்யவே இவ்வாறு கண்ணில் உதிரம் கொட்ட செய்தோம் '. என்று கூறி தன்னில் செர்த்துக்கொண்டார். மறைந்து நின்று இக்காட்சியை கண்ட அந்தணர் மெய்சிலிர்த்துப்போனார் . ஒன்றும் அறியா வேடன் திண்ணன் கண்ணப்ப நாயனாராகி சிவாலயங்களில் சிலையாக இருக்கிறார் .
No comments:
Post a Comment