மானக்கஞ்சாறர் வெட்டிய கூந்தலை கையில் எடுத்து இதோ பிடியுங்கள் என்று அடியாரிடம் நீட்டினார் . அதை அடியார் வாங்கி கொள்வார் என்று திரும்பியவர் அவர் மறைந்து விட்டது கண்டு திகைத்தார் . கூந்தலும் பழையபடி தன் பெண்ணின் தலையில் இருப்பதை கண்டார் . அப்போது ஈசன் வானில் தோன்றி ''அப்பனே உன் உயரிய பக்தியை உலகுக்கு காட்டவே இவ்வாறு செய்தோம் .'' என்று கூறி மறைந்தார் . மானக்கஞ்சாறர் மெய்சிலிர்த்து பலவாறு ஐயனை போற்றி துதித்தார் . மானக்கஞ்சாறரின் பெண்ணின் கூந்தல் முன்னினும் அதிக காந்தியுடன் விளங்கியது . இதனிடையே மணமகனின் வீட்டார் மண வீட்டை நெருங்கி கொண்டிருந்தனர் . அவர்கள் மணமகளின் கூந்தலை வெட்டி கொடுத்த செய்தியை கேள்விப்பட்டு கூந்தலில்லாத மணப்பெண்ணை மணப்பது சாஸ்திர விரோத மாயிர்றே என்று கவலை கொண்டனர் . ஆனால் சிறிது நேரத்தில் வந்தது சிவபெருமானே என்றும் பெண்ணின் கூந்தல் இப்போது அதிக காந்தியுடன் இருப்பதாக கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் . திருமணம் இனிதே நடந்து முடிந்தது .
இதன் பிறகு மானக்கஞ்சாறர் இன்னும் பக்தியுடன் சிவனடியார்களுக்கு சிறந்த சேவை செய்து சில காலம் வாழ்ந்து பிறகு சிவனடி சேர்ந்தார் .
இதன் பிறகு மானக்கஞ்சாறர் இன்னும் பக்தியுடன் சிவனடியார்களுக்கு சிறந்த சேவை செய்து சில காலம் வாழ்ந்து பிறகு சிவனடி சேர்ந்தார் .
No comments:
Post a Comment