Friday, 6 December 2019

திருக்குருகாவூர்   சென்று   சுந்தரர்   கட்டுசோறு  அளித்து   பசி   தீர்த்த   கங்காதரரை   நன்றிப்பெருக்குடன்   கண்ணீர்   மல்க   பதிகம்   பாடி   அவரை   மகிழ்வித்து   தானும்   மகிழ்ந்தார் .  பிறகு   சில   தலங்களை   சேவித்து   கொண்டு   தில்லையை   அடைந்தார் .    அங்கிருந்து   நல்லூர்   சென்றார் .  அங்கு   இவர்   வருவதை   அறிந்து   ஏராளமான   பக்தர்கள்   கூடி   அவரை   மிக்க   அன்புடன்   வரவேற்றனர் .  அந்த   வரவேற்பை   கண்டு   சுந்தரர்   நெகிழ்ந்து   போனார் .  அங்கு   சிலகாலம்   தங்கி   பிறகு   திருக்கழுக்குன்றம்   சென்று  வேதபுரீஸ்வரரை    வணங்கி   மகிழ்ந்தார் .  அங்கிருந்து   காஞ்சி  செல்ல   புறப்பட்டு  வழியில்  திருக்கச்சுர்   அடைந்தார் . வெய்யில்   தகித்தது .  பசி   தாகம்  அவர்   ஏற் பாடு   செய்திருந்தபடி   சமையல்காரர்கள்   வந்து   சேரவில்லை .   சோர்வுடன்   இருந்த   சுந்தரரின்   நிலைமையை    காண   சகியாத   ஈசன்   ஒரு   அந்தணர்   வடிவில்   வந்து   அவரிடம்   'உங்களை   பார்த்தால்   மிக   சோர்வுட ன்   காணப்படுகிறீர்கள் ' என்று   பரிவுடன்   கேட்டார் .  சுந்தரர்   நான்   ஏற்பாடு   செய்தபடி   சமையல்   செய்பவர்கள்   வந்து   சேரவில்லை   என்று   பதிலு ரைத்தார் .  ஈசன்  அதற்கு  கொஞ்சம்    பொறுங்கள்    அக்கிரகாரம்   சென்று   இரண்டு  மூன்று   வீடுகளில்   பிக்ஷை   வாங்கி   வந்து   உங்களுக்கு   உணவு   அளிக்கிறேன் .  என்று   சொல்லி   கிராமத்துள்   சென்று   உணவு   வாங்கி   வந்  அளிக்கிறார் .

No comments:

Post a Comment