ஈசன் அவர்களை சேர்க்கத்தானே சுந்தரரை ஒற்றியூர் வரவழைத்தார் . அவர் தம் வேலையை துவங்கினார் . இரவு சங்கிலியாரின் கனவில் தோன்றி என் தோழன் நம்பி ஆரூரன் உன்னை மணக்க விரும்புகிறான் .நீங்கள் இருவரும் இணைவது எனக்கும் சம்மதமே உன் சம்மதம் தேவை . என்று கேட்டார் . அதற்கு அவள் ' ஐயனே உமது கட்டளையை மீறும் சக்தி எனக்கு இல்லை . ஆனாலும் அவர் ஏற்கனவே பரவையாரை மணந்து வாழ்ந்து வருகிறார் . என்று தன் மன கவலையை தெரியப்படுத்தினாள் . அதற்கு ஈசன் உன்னை பிரிவதில்லை என்று சத்தியம் செய்து தர சொல்கிறேன் என்று சமாதானம் கூறினார் .
No comments:
Post a Comment