சில நாட்கள் சுந்தரர் சங்கிலியாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் . இருவரும் காலை மாலை இரு வேளையும் ஆலயம் சென்று ஒற்றியூர் பெருமானை சேவித்துக்கொண்டு ஊர்மக்கள் மெச்ச வாழ்க்கை நடத்தி வந்தனர் . சுந்தருக்கு இப்புவியில் இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் உள்ளதால் ஈசன் அவ்விதம் வாழ்வதை மாற்ற எண்ணம் கொண்டார் . திருவாரூரில் வசந்த உத்சவம் நடக்க வேண்டிய சமயம் அது . அதை பயன்படுத்திக்கொண்டு சுந்தரரின் மனதில் அந்த ஆவலை தூண்டிவிட்டார் . மனம் நிலை கொள்ளவில்லை . தியாகேசர் அவர் மனதில் தோன்றி அலைபாய வைத்தார் . ஆனால் போவது எவ்வாறு ? அவர் சங்கிலியாருக்கு செய்து கொடுத்த சத் தியம் ஒரு புரம் அழைத்து போவது சாத்தியமில்லை . பரவையார் அனுமதிக்க மாட்டார் . மனம் தடுமாறியது . இத்தனை இக்கட்டிலும் அவரால் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை . பொறுக்க முடியாமல் ஒரு நாள் ஆரூர் கிளம்பி விட்டார் . சங்கிலியாரிடம் சொல்லாமல் ஆரூர் செல்ல முற்பட்டார் . ஒற்றியூர் எல்லை தாண்டியதும் அவர் கண்கள் இருண்டு த லை சுற்றி கீழே விழுந்தார் . எழுந்த போது அவருடைய இரு கண்களும் ஒளி இழந்து பார்வை அற்று போயிருந்தார் .
No comments:
Post a Comment