Tuesday, 10 December 2019

காஞ்சியை   அடைந்த   சுந்தரர்  ஏகாம்பிரேஸ்வரரை   வணங்கி   மகிழ்ந்து   அங்கு   சில   நாட்கள்   தங்கி   இருந்து   பிறகு , திருமேற்றளி   ஓணகாந்தன்தளி   மற்றும்   சில   தலங்களை   சேவித்து   திருக்காளத்தி   அடைந்தார் .  மலையை   வழிப்பட்டு   படியேறி   சென்று   இறைவனுக்கு   கண்   கொடுத்து   ஈசனின்   வல ப்பாகத்தில்   இடம்   பெற்ற   கண்ணப்பரை   தரிசித்து  களித்தார் .  அங்கிருந்து   மனக்கண்ணாலேயே   திருக்கேதாரம் ,   திருப்பருப்பதம்   முதலிய   இடங்களை   சேவித்துக்கொண்டார் .   காஞ்சியிலிருந்து   புறப்பட்டு   திருஒற்றியூர்   வந்து   சேர்ந்தார் .  அவருடைய    பிறப்பின்   மற்றோரு   காரணம்   நிறைவேற   ஈசன்   திட்டப்படி   அங்கு   வந்தார் .
        கைலையில்   வாழும்போது   சுந்தரர்   இரு  பெண்களை   கண்டு  மயங்கி   சில   கணங்கள்    மூவரும்   தன்நிலை    மறந்தனர் .  ஈசன்   அவர்களை   இவ்வுலகில்   பிறந்து   சுந்தரர்   அந்த   இரு  பெண்களையும்   மணந்து   சிறிது   காலம்   இல்லற   சுகம்   அனுபவிக்க   கட்டளையிட்டார் .   சுந்தரர்   இவ்வுலகில்   வாழும்போது  அவருக்கு   வழிகாட்டுவதாகவும்    வாக்களித்தார் .  அதனால்தான்   அவர்   திருமணம்   செய்துகொள்ள   முடிவு  செய்தபோது   ஐயன்   ஓலையை   காட்டி   ஆட்கொண்டார் .    

No comments:

Post a Comment