சங்கிலி நாச்சியாரின் கதையை கேட்ட சுந்தரரின் மனம் அலை பாய்ந்தது . அவளை அடைய மனம் ஆவல் கொண்டது . தாம் இப்புவியில் பிறக்க இரண்டு பெண்கள் காரணம் என்பதை அறிந்திருந்த சுந்தரர் பரவையாரை தவிர மற்றவள் அவளோ என்று அவர் மனம் எண்ணியது . சங்கிலியார் ஈசன் அருள் பெற்றவர் என்று குறிப்பிட்டது தன்னைத்தானோ என்று சந்தேகம் உண்டாயிற்று . அதை ஐயனை கேட்டே தெளிவு படுத்திக்கொள்ள முடிவு செய்தார் . ஒற்றியூர் சிவபெருமானை நாடி ''என் உள்ளத்தில் மிகுந்த சலனத்தை ஏன் ஏற்படுத்தி விட்டாய் ? அன்று நடக்கவிருந்த என் திருமணத்தை நிறுத்தி என்னை ஆட்கொண்ட பெருந்தகை அல்லவோ நீ ? இன்று இப்பெண்ணை கண்டு சலனப்பட வைத்து விட்டாய் ? அப்படியானால் அவள்தான் அந்த இரண்டாவது பெண்ணா ? என க்கு அவளை கண்டதும் அவளை ஆடைய வேண்டுமென்ற வேட்கையை ஏன் ஏற்படுத்தினாய் ? அவளை எனக்கு மணமுடித்து வைத்து விடு '' என்று புலம்பினான் . ஈசன் உமது இச்சையை நாம் நிறை வேற்றி வைப்போம் என்று வாக்களித்தார் .
No comments:
Post a Comment