Friday, 13 December 2019

தரிசனம்   முடித்து   மடத்திற்கு   வந்த   சுந்தரருக்கு   மனம்   நிலைக்கொள்ளவில்லை .   கோயிலில்   கண்ட   அப்பெண்ணின்   மலர்முகம்  அவரை   அலைக்கழித்தது .  தன்னுடன்   ஆலயத்திற்கு   வந்த   ஒருவரிடம்   அந்த   பெண்ணை   பற்றி   விசாரித்தார் .  அவர்      அவ்வூரின்   எல்லையில்   உள்ள  ஞாயிறு   எனும்   இடத்தில்      ஞாயிறுகிழார்   என்பவர்   குடும்பத்துடன்   வசிக்கிறார்   என்றும்   அவருடைய   மகள்   சங்கிலி   எனும்   பெயர்  என்றும்   அவர்   தெரிவித்தார் .  மேலும்   அவர்   அவளுடைய   பெற்றோர்கள்   அவளுடைய   திருமண  பேச்செடுத்தால்   ஈசன்   அருள்   பெற்ற   ஒருவரைத்தான்   மணமுடிப்பேன்   என்றும்   தனக்கு   ஒற்றியூர்   பெம்மானுக்கு   சேவை   செய்வது   ஒன்றே   விருப்பம்   என்று   சொல்லி   மறுத்து   வந்ததாகவும்   கூறினார் .  அவளை   மாற்ற  எடுத்த   முயற்சி   பலனளிக்கவில்லை .   ஒரு   சமயம்   அவருடைய      உறவினர்   தன்  மகனுக்கு   அவளை   மணம்   பேசவந்து   பேசி   முடித்துக்கொண்டு     ஊர்   திரும்பினர் .   அனால்  அவர்கள்   போய்   சேர்ந்த   போது  அந்த   மகன்   இறந்து   கிடந்தது   கண்டு   அதிர்ந்து  போனார்கள்  .  ஞாயிறு   கிழாரும்   பெண்ணின்   வார்த்தையில்   உள்ள   உண்மையை        உணர்ந்து   அதிர்ந்து   போனார் .   இந்த   விவரங்களை   கேட்ட   சுந்தரர்   திடுக்கிட்டார் .         

No comments:

Post a Comment