ஐயன் சங்கிலியரிடமிருந்து ஆரூரரிடம் வந்தார் . சுந்தரா நீ விரும்பியபடி அவள் உன்னை மணக்க சம்மதித்து விட்டாள் . ஆனால் ஒரு நிபந்தனை. அதாவது என் முன்னால் அவளை பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து தர வேண்டும் . என்றார் அவள் சம்மதித்தது சுந்தரருக்கு பேரானந்தம் அளித்தது . ஆனால் தல யாத்திரை செய்து சிவபெருமானை சேவிக்காமல் இருக்க ? அது சாத்தியமா கேள்வி எழுந்தது . தோழனல்ல வா எதுவும் கேட்கலாம் . என்று ஐயனே நான் சத்தியம் செய்ய வரும்போது தாங்கள் தயை கூர்ந்து சன்னதியிலிருந்து விலகி மகிழ மரத்தில் சிறிது நேரம் தங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . அவர் சம்மதித்தார் . அனால் உடனே சங்கிலியிடம் சென்று பெருமான் சிரித்துக்கொண்டே சங்கிலி நாளை ஆருரனிடம் சன்னதியில் சத்தியம் செய்ய தேவையில்லை . மகிழ மரத்தடியில் செய்தால் போதும் என்று கூறிவிட சொன்னார் .
No comments:
Post a Comment