Thursday, 28 November 2019

சம்பந்தர்   பிறந்த   மண்ணில்   கால்   வைக்க   மனம்   ஒப்பாமல்   சுந்தரர்   சீர்காழி   நகரை   வலம்   வந்து   வணங்கிவிட்டு    திருக்கு ருகாவூர்    நோக்கி   பயணப்பட்டார் .  சுந்தரர்   மிக   களைப்புடனும்   பசியுடனும்   இருந்தார் .  தம்பிரான்   தன்   தோழர்   பசியை   காண   சகிப்பாரா?   மனம்   பொறாமல்   ஓடிவந்தார் .  பாதையில்   ஓரிடத்தில்       ஓரு    பந்தல்   அமைத்து   அதில்   கட்டு   சோறுடன்   அந்தணர்வேதத்தில்   காத்திருந்தார் .  சுந்தரர்    பாதையில்   தென்பட்ட     பந்தலை   கண்டு   மகிழ்ந்து   அடியார்களுடன்   அங்கு   தங்க   திட்டமிட்டு   அங்கு   வந்தார் .  அந்தணர்   கோலத்திலிருந்த   ஐயன்   'உங்களை   பார்த்தால்   களைத்து   போயிருப்பது   தெரிகிறது .  என்னிடம்   சிறிது   உணவு   இருக்கிறது  . அதை   உண்டு   களைப்பாருங்கள் .   என்று      சொல்லி   வைத்திருந்த   உணவை   கொடுத்தார் .  அந்த   உணவை   அடியார்களுக்கும்   கொடுத்து   தானும்   உண்டார் .  எல்லோரும்   உறங்கி   விட்டனர் .  வந்த   வேலை   முடிந்த   களி ப்பில்   ஈசன்   மறைந்தார் .  பந்தலும்   மறைந்தது .  சுள்ளென்று   வெய்யில்   அடிக்க  எல்லோரும்   கண்   விழித்தனர் .   சுந்தரர்   தம்   பசிக்கு   உணவளித்து   வெய்யிலுக்கு  பந்தலும்   அமைத்து   தம்மை   காத்தது   எம்பெருமான்   என்று   உணர்ந்து   பக்தி   பரவசத்தில்   கண்ணீர்   பெருக  ''இத்தணை   யாமாற்றை ''  என்று   பதிகம்   பாடி   மெய்சிலிர்க்க   மயங்கி   நின்றார் .   

No comments:

Post a Comment