Monday, 23 December 2019

சுந்தரர்   வார்த்தைகளை   கேட்ட   சங்கிலியார்     சந்தோஷத்துடன்   'சுவாமி  உங்கள்   வார்த்தையில்   நம்பிக்கை   இல்லாவிடில்   அன்றோ  ஈசன்   முன்   சத்தியம்   செய்ய   வேண்டும்    எனக்கு  உம்மிடம்    அதிக   நம்பிக்கை   இருக்கிறது .  ஆகையால்   சாதாரண   சத்தியமே   போதும் '  என்றாள் .  பின்   எங்கு   சத்தியம்   செய்து   தரவேண்டும்   என்று   திடுக்கிட்ட   சுந்தரர்   வினவினார் .   அதற்கு   அவள்   வாருங்கள்   அந்த   குளிர்ந்த   மகிழ   மரத்தடியில்  செல்வோம்.  அங்கு   என்   மனம்   குளிர   சத்தியம்   செய்து   கொடுத்தால்   போதும் '  என்று   கூறினாள் .   சுந்தரர்   திடுக்கிட்டார் .  ஐயன்  அங்கு  அல்லவா   இருக்கிறார் .  இ ப்போது   மறுத்து    சொல்வதற்கில்லை  .   தவறாக   நினைப்பாள் .   இறைவன்   முன்   அல்லவோ   சத்தியம்   செய்து   தர   வேண்டும் .  தர்ம   சங்கடத்தில்   அல்லவோ   மாட்டிக்கொண்டார் .  சங்கிலியார்   சுந்தரரை   வணங்கி   விடை   பெற்றாள்  .  அவரும்   பெருமானை   வணங்கி   விட்டு   மடத்திற்கு  சென்றார் .   ஈசன்   அடியார்கள்   கனவில்   தோன்றி   மறுநாள்   அவர்கள்  திருமணத்தை   விமரிசையாக   நடத்துமாறு    ஆணையிட்டார் .       ஐயன்   திருவாக்குப்படி   திருமணம்   நடந்தேறியது .  மண   வாழ்க்கை    மகிழ்ச்சியாக  துவங்கியது .    

No comments:

Post a Comment