சுந்தரர் அப்பெரிய தர்மசங்கடத்திலிருந்து எம்பிரான் பெரும் கருணையாலும் அவர் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றி இல்லாவிடில் மூன்றாவதாக அப்பெண்ணை மணந்து இப்பூலோக வாழ்வை நீட்டித்திருப்பார் . ஐயன் பேரருளை சுந்தரர் மறக்கமுடியுமா ? அவர் கைலையில் கண்ட ஒரு பெண் பரவையாரை மணந்து திருவாரூரில் . வாழ்ந்து வருகிறார் . மற்றோரு பெண்ணை சநதிக்க ஒற்றியூருடைய பெம்மான் துணை செய்கிறார் .
ஒற்றியூரில் சுந்தரர் ஒரு மடத்தில் தங்கி எம்பெருமானை தினம் தரிசித்து வருங்கால் ஒருநாள் கோயிலில் அடியார்களின் தொண்டினை பார்த்து மகிழ்ந்தபடி வந்து மலர் மண்டபத்தை அடைந்தார் . அங்கு வாசமிக்க மலர்களை மாலையாக கட்டிக்கொண்டிருந்த காட்சியை ரசித்தபடி சுந்தரர் வந்து கொண்டிருந்தார் . அப்போது ஒரு அழகிய மங்கை மாலையை எடுத்துக்கோண்டு திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தாள் . சுந்தரர் அவளை கண்டு ஒரு கணம் மலைத்தார் . அவளும் அவரை கண்டு ஒரு மலைத்து நின்று பிறகு ஓடி மறை.ந்தாள் .

No comments:
Post a Comment