சுந்தரர் மழபாடியில் சில நாள் தங்கி ஆசைதீர அவரை சேவித்துக்கொண்டு திருவானைக்கா புறப்பட்டார் . அந்த ஈசனை பாராட்டி பதிகங்கள் பாடி மகிழ்வித்தார் . அங்கு ஆற்று வெள்ளத்தில் விழுந்த சோழ மன்னனின் முத்துமாலையை திருமஞ்சனத்திற்கு கொண்டு சென்ற குடத்தில் வரவழைத்த அந்த ஈசனின் திருவிளையாடல் சுந்தரரை மெய்சிலிர்க்க வைத்தது . அக்கருணையை நினைந்து நினைந்து உருகி போற்றினார் . அங்கிருந்து புறப்பட்டு திருபாலாச்சிரமம் சென்று அங்கு குடிகொண்டிருந்த ஈசனை பாடி பொன் பெற்றார் . அங்கிருந்து புறப்பட்டு திருப்பைஞிலி , ஈங்கோய்மலை சென்று சேவித்துக்கொண்டு மேலை சிதம்பரம் என்று கொண்டாடப்படும் பேரூர் அடைந்தார் . அங்கு கூத்தப்பிரானின் தாண்டவ கோலத்தை தரிசித்து ஆனந்தம் அடைந்தார் . அங்கு அவருக்கு தில்லை அம்பலக்கூத்தனை தரிசனம் செய்யவும் ஆவல் எழுந்தது .
No comments:
Post a Comment