சுந்தரருக்கு மீண்டும் ஐயன் ஞாபகம் மறுபடி தல யாத்திரை புறப்பட்டார் . நன்னிலம் சென்று பரமனை தரிசித்து கொண்டு திருவீழிமிழலை ஆவடுதுறை மற்றும் பல தலங்களை தரிசித்துக்கொண்டு திருக்குடந்தை எம்பெருமான் திருவடி தொழுது அவர் மீது பாடல்கள் புனைந்து பாடி மகிழ்ந்து புறப்பட்டார் . அங்கிருந்து திருவலஞ்சுழி திருநல்லூர் திருவையாறு எல்லாம் சென்று திருஆலம்பொழில் அடைந்தார் . இரவு நேரம் ஆகிவிடவே அங்கேயே படுத்து உறங்கி போனார் . பக்கத்தில் மழபாடி எனும் ஊர் உளது . அங்கு குடிகொண்டுள்ள ஈசனுக்கு தம் அருமை பக்தன் தன்னை வணங்காமல் போய்விடுவானோ என்று அச்சம் எழுந்தது போலும் . சுந்தரர் கனவில் தோன்றி '' வன்தொண்டனே மழபாடி வர மறந்தனையோ ?'' என்று கேட்டு மறைந்தார் . திடுக்கிட்டு எழுந்தா ர் . சந்தரர் நேராக திருஆனைக்கா செல்ல தான் எண்ணி இருந் தார் . தன்னை நினைவு படுத்தி மழபாடிக்கு அழைத்த அவர் பேரன்பை எண்ணி சுந்தரர் மனம் பாகாய் உருகியது . இரவில்லாம் அதே மகிழ்ச்சி . ஐயன் கருணையை எண்ணி சொல்லணா இன்பம் . விடிந்ததும் சொல்லொணா ஆனந்தத்துடன் கோயில் சென்றார் .ஓங்கி உயர்ந்த கோபுரம் கண்டு மெய்சிலிர்த்தார் . உள் சென்று 'பொன்னார் மேனியனே ' என்று பதிகம் பாடி தொழுது மகிழ்ந்தார் .
No comments:
Post a Comment